இம்முறை ஹஜ் கடமைகளுக்காக சவுதி அரேபியா செல்ல இலங்கையிலிருந்து 2240 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாவது குழுவினர் சவுதியின் ஜெடா நகரை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாகவும், இலங்கைக்கான சவுதியின் தூதுவர் உள்ளிட்ட 62 அதிகாரிகளால் குறித்த குழு சவுதியில் வைத்து வரவேற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மக்காவில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளினால் ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை இம்முறை வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.