முஸ்லிம் தேசியத்தின் சுய நிர்ணயத்தை உறுதிப்படுத்த தயாரா..?

kilakkin ezhuchiமுஸ்லிம் தேசியத்தின் சுய நிர்ணயத்தை உறுதிப்படுத்தத் தேவையான அதிகார அமைப்பு அதன் எல்லைகள் பற்றிய விவாதம் ஒன்றை சமூகத்தின் எல்லா தரப்பிலிருந்தும் கிழக்கின் எழுச்சி எதிர்பார்க்கின்றது.
வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிந்திருக்க வேண்டுமா? 
இணைய நேர்ந்தால் அதில் முஸ்லிம்களுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?  
இப்போதிருப்பது போல் பிரிந்திருந்தால், இப்போதுள்ள ஏற்பாடே போதுமானதா? அல்லது வேறு திட்டங்களை முன் வைக்க வேண்டுமா?
வேறு ஏற்பாடுகள் கிழக்கிற்கு மட்டும் தேவையாயின், அது தனது எல்லையாக எதை கொள்ளும்? கிழக்கிற்குள் உள்ள சிங்கள மக்களுக்கு எவ்வாறான திட்டங்கள் உள்ளன? தமிழ் மக்களை தவிர்த்த திட்டமொன்றையா நாம் முன்வைப்பது? வடக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு தீர்வென்ன? 
இது பற்றி எல்லாம் பலர் பேசியிருக்கிறார்கள் பலர் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் முடிந்தளவு சந்தித்து அவர்களது கருத்துக்களையும் வேறு கல்விமான்கள் புத்தி ஜீவிகள் அரசியல்வாதிகள் என்று எல்லோரையும் சந்தித்து ஒரு வரைபை முன்மொழிய நாம் தயாராகி வருகிறோம்.
இதற்கான பங்களிப்பை முகநூலில் உள்ளவர்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது சம்பந்தமான நூல்கள் ஆக்கங்கள் அறிக்கைகள் எது இருந்தாலும் அது பற்றி எமக்கு அறியத்தரவும். அல்லது இது குறித்த அறிவுள்ள யாரையாவது நாங்கள் சந்திப்பது நன்று என்று நீங்கள் கருதினால், அவர்கள் குறித்த தகவல்களையும் தந்துதவலாம். இப்பதிவுக்குக் கீழே உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். அவசியப்பட்டவர்களை Tag செய்து அவர்களது கருத்துக்களையும் பெற உதவுங்கள். நன்றி. 
செயலாளர்
கிழக்கின் எழுச்சி.