யாழில் திறக்கப்பட்ட அலுமினிய உற்பத்தி நிறுவனம் – பிரதம அதிதியாக அமைச்சர் விஜயகலா

சப்னி அஹமட்
வடக்கின் இளைஞர் மற்றும் தொழில் முனைவர்களுக்கு வேலை வாய்ப்புக்களுக்கு சந்தர்ப்பமளிக்கும் வகையில் அலுமினிய பொருள் உற்பத்தி நிறுவனமொன்று நேற்று (13) தெல்லிப்பளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மதுரையை சேர்ந்த முதலீட்டாளரான திலகராஜா என்பவரால் இந்த நிறுவனம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது ..
DSC_0159 (1)_Fotor
திறப்பு விழாவில், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துனைத்தூவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வாமாக இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர். அதேவேளை, இத் தொழிற்சாலையில் அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலுமினியம் சார்ந்த உற்பத்திகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்நிலையில் குறித்த உற்பத்தி நிறுவனத்தினூடாக இங்குள்ள பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் என இதன் நிர்வாக இயக்குனர் குறிப்பிட்டிருந்தார்.
DSC_0131_Fotor
கடந்த முப்பது வருட யுத்திற்கு முன்னரே இவ் தொழிற்சாலை இப் பகுதியில் இயங்கிவந்திருந்த நிலையில் அதன் பின்னர் வடக்கில் ஏற்பட்ட யுத்த நிலமைகளால் தொழிற்சாலை கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய முதலீட்டாளரான திலகாராஜா என்பவரால் இந் நிறுவனம் மீள இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த அலுமினிய உற்பத்தி நிறுவன முதலீட்டாளர் இங்கு மேலும் பல உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்கி சுமார் 2000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக திறப்பு விழாவின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.