இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் தனஞ்செயாவின் சதத்தால் இலங்கை அணி முதல நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்செயா டி சில்வா 116 ரன்னுடனும், சண்டிமால் 64 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய டி சில்வா 129 ரன்கள் சேர்த்து லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களை துணையாக வைத்து கொண்டு சண்டிமால் சிறப்பாக விளையாடினார். ரங்கனா ஹெராத் 33 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினா். சண்டிமால் இலங்கை அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் சதமும் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 132 ரன்ள்க எடுத்து 9-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார்.
இவர் அவுட்டானதும் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்ககள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டும், லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், ஷேன் மார்ஷூம் களம் இறங்கினார்கள். வார்னர் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 2-வது நாள் மதிய தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.