றிசாத்தின் வேண்டுகோளையேற்று கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் விரைவு

 13918668_627369840762398_2065093359_o_Fotor

ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ பள்ளியில் பள்ளிவாசல் தலைவர் மற்றும் தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். 

 

ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் றிசாத் பதியுதீன் பலமுறை தன்னை சந்தித்துப் பேச்சு நடத்தியதாகவும், இந்தக் கடலரிப்புப் பிரதேசத்துக்கு தற்காலிக பாதுகாப்புச் சுவர் ஒன்றை அவசரமாக அமைக்கும் நோக்கிலேயே தாம் வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

13918906_627369810762401_1572967501_o_Fotor

அமைச்சர் றிசாத் இந்தப் பிரச்சினை தொடர்பில் துறைமுக அதிகார சபைத் தலைவர் தம்மிக ரணதுங்க, உயரதிகாரிகள் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தியதையும் நினைவூட்டிய அவர், இந்த மக்களுக்கான நிரந்தரத் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் உறுதியளித்தார்.

 

இந்தச் சந்திப்பில் கொழும்பிலிருந்து அமைச்சரின் விஷேட பிரதிநிதியாக அங்கு சென்றிருக்கும், அமைச்சரின் இணைப்பாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும், முன்னாள் எம்.பியுமான எஸ்.எஸ்.பி. மஜீத் மற்றும் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். 

13978197_627369854095730_1726893172_o_Fotor

ஒலுவில் பொதுமக்கள் தாம்படுகின்ற அவஸ்தைகளையும், கஷ்டங்களையும் பிரதிப் பணிப்பாளர் பிரபாத்திடம் எடுத்துக்கூறிய போது, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை தாம் இங்கு வந்த பின்னர் உணர்ந்துள்ளதாக பணிப்பாளர் பிரபாத் தெரவித்தார்.