பொதுச் செயலாளர்கள் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்கள் இவ்வாறு கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என அவர்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 
பாத யாத்திரையில் இணைந்து கொண்டு கட்சியையும் மத்திய செயற்குழு உறுப்பினர்களையும் விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
வீதியில் இறங்கி எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் பாராளுமன்றில் 113 ஆசனங்களைக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது எனவும் இந்த அரசாங்கத்தை அவ்வாறு கவிழ்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
அரசியல் சாசனம் பற்றி போலியான கோசங்கள் எழுப்பி பொய்யாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 
எல்லை நிர்ணய அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.