பாதயாத்திரையின் போது முறைக்கேடாக நடந்துக் கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையின் போது தகாத முறையில் நடந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஊடகம் ஒன்றிக்கு கருத்து வழங்கும்போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

பாதயாத்திரையின் போது இடம் பெற்ற சம்பவங்கள் காணொளியாக பதிவாகியுள்ளமையினால் முறைக்கேடாக நடந்துக் கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை இலகுவில் மேற்கொள்ளமுடியும்.

 

இதே வேளை பாதயாத்திரை எதற்காக மேற்கொண்டோம் என பாதயாத்திரையில் ஈடுபட்டவர்களே சிந்திக்கும் நிலைமையும் தற்போது ஏற்பட்டு விட்டதாகவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும் பாதயாத்திரையில் கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராகவும் விரைவில் மத்திய குழுவினால் தீர்மானம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.