அமெரிக்காவின் புளோரிடாவில் மேலும் 10 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல்

GM-mosquito-release

எடிஸ் வகை கொசுக்கள் இந்த ஜிகா வைரஸை பரப்பி வருகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை வளர்ச்சி குறைபாடு, நரம்பு மண்டல குறை பாட்டுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

பிரேசிலில் மட்டும் இத்தகைய குறைபாடுகளுடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. எனவே இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று தென்அமெரிக்க நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் ஜிகா வைரஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வேகமாக பரவி வருகிறது. அம்மாகாணத்தின் மியாமி நகரத்தில் கடந்த வாரம் ஜிகா வைரசால் 4 நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது இதே பகுதியில் மேலும் 10 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜிகா வைரஸ் உள்ள கொசுக்கள் கடித்ததன் மூலம் 10 பேருக்கும் ஜிகா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.