மாமனிதரின் கனவு நகரம் கடலால் காவு கொள்ளப்படுகிறது ஒலுவில்
வட்டமடு விவசாய நிலம் இதுவரை பலி கொண்ட வரலாறு போக எம்மவர்கள் புக முடியவில்லை
கரும்புச்செய்கை காக பலவந்தமாக எமது விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலம் கையளிக்கப்படவில்லை
பொத்துவில் தனியான கல்வி வலயம் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது
நுரைச்சோலை சவூதி அரேபியா வீட்டுத் திட்டம் முற்புதர் காடுகளாக மாறிக் கிடக்கிறது
சுயநலத்துக்காக தடுக்கப்பட்ட சாய்ந்தமருது மருதமுனை உள்ளூராட்சி மன்றங்களுக்காக கூட்டாக இருந்து சதி செய்து தடுத்தவர்கள் இன்று பிரிந்து நின்று முயற்சிக்கிறார்கள்
புட்டம்பை துரத்தப்பட்ட முஸ்லீம்களின் நிலம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை
இன வன்முறையால் கொல்லப்பட்டோர் காயமடைந்தோர் ஆனாதையானோர் கணக்கிலெடுக்கவில்லை
இது அம்பாரையில் உள்ள பிரச்சினை இவற்றுக்கு மேலதிகமாக அடிக்கடி சொல்லும்
கரையோர மாவட்டம்
தென்கிழக்கலகு
சுயாட்சி நிலப்பரப்பு
தம்புள்ளை பள்ளிவாசல் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மாற்று இடம் தருவதாக சொன்னார்கள் கிளர்ந்தெழுந்தோம் இப்போது மாற்று இடத்திலே கட்டப்படுகிறது நாம் மெளனம்
பாத்தியா மாவத்த பள்ளிவாசலின் அனுமதி ரத்தாகி இருக்கிறது
மகியங்கனை யில் தொடரான பிரச்சினை
குர்ஆனை அவமதிக்கும் ஞானசார வும் அவர்தம் கூட்டமும்
இவ்வாறு பொதுவான பிரச்சினைகள்
வடக்கில் முஸ்லீம்களை குடியமர்த்த நடக்கின்ற மிகப் பெரிய அரசியல் சமர்
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் இன்னமும் கையளிக்கபடாத எமது மக்களின் வாழ்விடங்கள்
தொடரும் எமது துயர நிலை
ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்திதான் நாம் இவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால்
எதற்க்காக தலைவர்களென்று தலையிலே தூக்கி வைத்து கொண்டாடுகிறோம்
நல்லாட்சி என்பதை உருவாக்கியதில் நூறு வீத பங்களிப்பு எம்முடையதல்லவா?
அப்படியாயின் இவர்களால் பேச முடியாது
இவர்கள் நல்லாட்சியில் பதவிக்காக சோரம் போய் விட்டார்களா?
இன்னும் எவ்வளவு காலம்தான் இந்த பிரச்சனைகளை வைத்து நாடகமாட போகிறார்கள்
அபிவிருத்தி அரசியல் என்றால் வெறும் நாற்பதாயிரம் வாக்குகளுடன் அதாஉல்லாஹ் செய்யாததா?
தமிழ் தேசியத்துடன் நட்பு பாரட்டி வடகிழக்கு இணைப்பு பற்றி பேசுபவர்கள் ஆகக் குறைந்தது எமக்கு அவர்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்வுக்கு வழி செய்வார்களா?
ஏன் என்று நீங்கள் ஒரு போதும் உணரமாட்டீர்கள். நீங்கள் அந்தந்த நேரங்களில் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அரசியலால் மழுங்கடிக்கப்படுகின்ற ஒரு வகையான நிலையில் வாழ்கிறீர்கள்
உங்கள் தெரிவுகளை நீங்களே முன்வையுங்கள் தலைவர்களை மாற்றியமைக்க போவதாக சொல்லுங்கள்
விடை கிடைக்கும் தனக்கு கிடைத்தால் போதுமன்று இருந்தால் சுயநல அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து இந்த தேசியத்தை மீட்க முடியாது, .
அஸ்மி அப்துல் கபூர்