யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழ வியாபாரம் அமோகம்!

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில் தற்போது  வெள்ளரிப்பழ  வியாபாரம் மிகவும் மும்முரமாக சூடுப்பிடித்துள்ளது.

 இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்கள்  மற்றும் சந்தைகளின் வெள்ளரிப்பழ வியாபாரிகள் மிகவும் ஆர்வத்துடன் விற்பனை செய்து வருகின்றனர்.

snapshot250_Fotor

யாழ் விவசாயிகள் பலர் வெள்ளரிப்பழத்தை ஒரு  ஊடுபயிராக விவசாயத்தில் இணைத்துள்ளனர்.

தற்போது இப்பயிர் செய்கையை  250 மேற்பட்ட விவசாயிகள் மேற்கொண்டுவருகின்றனர் என  யாழ் மாவட்ட செயலக விவசாயப்பணிப்பாளர் திருமதி கையிலேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

யாழ்ப்பாணத்தில்  இப்பயிர்ச் செய்கையின் ஊடாக மேலும் பல விவசாயிகளிடம் இருந்து ஆர்வத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.இதன்ஊடாகவெளிமாவட்டங்களுக்கான சந்தை வாய்ப்புக்களை  பெற்றுக்கொடுக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார்.இதன் காரணமாக  யாழ்ப்பாணத்தில் பெருமாளவான விவசாயிகள் இப்பயிர்ச்செய்கையில் கூடிய வருமானதாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக  இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

இதன் அடிப்படையில் ஒரு பெரிய வெள்ளரிப்பழத்தின்  விலை ரூபா 250 முதல் சிறிய  வெள்ளரிப்பழத்தின்  விலை ரூபா 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

இதன் மூலம்  நாளொன்றுக்கு ஒரு விவசாயி 1500 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளகூடியதாக உள்ளதாக யாழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.பொதுமக்களும் மிகவும்  ஆர்வத்துடன்  இப்பழத்தை வாங்கி செல்லுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி கோப்பாய் பண்டதரிப்பு மாதகல் சுன்னாகம் மல்லாகம் மருதார்மடம்  திருநெல்வேலி ஆகிய இடங்களின் இப்பயிர்ச்செய்கை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.