தேர்தலில் தாம் விரும்பும் வேட்பாளர் மற்றும் விரும்பிய எந்த கட்சிக்கும் ஒரே வாக்குச் சீட்டில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வாக்காளர்களுக்கு வழங்க அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளதாக அரச நிறுவனங்கள் தொடர்பான பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் முறை தொடர்பில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், தொகுதி வாரியாக விரும்பிய வேட்பாளருக்கு ஒரு வாக்கும், விரும்பிய எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு மற்றுமொரு வாக்கையும் பயன்படுத்த முடியும்.
தொகுதி வாரியாக 140 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதுடன் கட்சிகளுக்கு கிடைக்க வாக்குகளின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஜேர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அமுலில் இருக்கும் இந்த தேர்தல் முறையினால், சிறிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் எரான் விக்ரமரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.