நல்லாட்சி என்ற போர்வையில் குற்றச் செயல்களில் ஈடுபட எவருக்கும் அனுமதியளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி என்ற பெயாப் பலகைக்குள் மறைந்து குற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் தங்களது மனச்சாட்சிக்கு இணங்க செயற்படாவிட்டால் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி மற்றும் நல்லிணக்க எண்ணக்கருக்களை வெற்றியீட்டச் செய்து நாட்டையும் மக்களையும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமையிலிருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதனை விடவும், பொறுப்பேற்ற பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என அவர்தெரிவித்துள்ளார்.