சம்பள உயர்வுக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-சர்வோதய அமைப்பு கொட்டகலை நகரில் போராட்டம்

IMG 0012 (5)_Fotorக.கிஷாந்தன்

தோட்ட தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காத சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள உயர்வு இன்றி வாழ்வாதாரத்தில் பாதிக்கப்படும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் மந்த போஷனத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

IMG 0012 (3)_Fotor

தோட்ட தொழில் நடவடிக்கை மற்றும் பாடசாலையின் கல்வி நடவடிக்கை வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கை என்று இன்னும் பல விடயங்கள் சம்பள உயர்வு இன்றி தொழிலாளர்கள் வாழ்வதால் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாக வழியுறுத்தியும், சம்மந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுத்தும் சர்வோதய அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளடங்களாக ஜே.வி.பியின் ஆசிரியர் அமைப்பு தோட்ட தொழிலாளர்கள் கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் ஆகியோரின் ஆதரவுடன் சாத்வீகமாக தெளிவூட்டும் போராட்டம் இடம்பெற்றது.

IMG 0012 (2)_Fotor

கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 250ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆலய வழிபாடு மற்றும் சம்பள உயர்வை வழியுறுத்திய வீதி நாடகம் போன்றவை இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

அதேவேளை கொட்டகலை நகர வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை ஒரு மணி நேரம் அடைத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் திம்புள்ள பத்தனை பொலிஸார் இப்போராட்டத்திற்கான பாதுகாப்பினை வழங்கியமையும் மேலும் குறிப்பிடதக்கது.