ஆஸ்திரேலியா பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி; மால்கம் மீண்டும் பிரதமராகிறார்!

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு மறுதேர்தல் நடந்தது. அதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் போட்டியிட்டது. தேர்தலில் இரு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
malcom
வாக்குபதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தனி மெஜாரிட்டி கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

மெஜாரிட்டி கிடைக்க இன்னும் 72 இடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் எதிர்கட்சியான தொழிலாளர்கட்சியின் தலைவர் பில்ஷோர்டன் பிரதமர் மால்கம் டர்ன் புல்லுக்கு டெலிபோனில் வாழ்த்து கூறினார். மேலும் தனது கட்சியின் தோல்வியை அவர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2-ந் தேதி தேர்தல் நடந்தது. அதில் இருந்து தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த அரசு அமைப்பது யார் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவியது. தற்போது கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றதாக அளிவிக்கப்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவில் நிலவிய அரசியல் குழப்பம் முடிந்தது. எனவே மால்கம் டர்ன்புல் மீண்டும் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.