விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சும் மோதினார்கள். முர்ரேவும், ரயோனிச்சும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் முர்ரே 6 முறையும், ரயோனிச் 3 முறையும் வென்றுள்ளனர்.
2012 அமெரிக்க ஓபன், 2013 விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள முர்ரே, ரயோனிச்சை வீழ்த்தி 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் தீவிரத்துடன் களமிறங்கினார். அதேநேரத்தில் அதிவேக சர்வீஸ்க்கு சொந்தக்காரரான ரயோனிச், ரோஜர் பெடரரை வீழ்த்திய உற்சாகத்தில் இறுதிப்போட்டியில் முர்ரேவை எதிர்க்கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஆன்டி முர்ரே, மிலோஸ் ரயோனிச்சை 6-4, 7-6 (7/3), 7-6 (7/2) செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இது முர்ரே வெல்லும் 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.