அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இயங்கிய கட்டிடத்தை குத்தகைக்கு விட வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாக பலன் தரும் வகையில் இந்த கட்டிடத்தை பிரயோசனப்படுத்துவது பொருத்தமானது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தை குத்தகை அல்லது வாடகைக்கு வழங்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் தலைமையில் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்த கட்டிடத்தை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.