அக்கரைப்பற்று விளையாட்டு துறையை அதாஉல்லா அழித்தாரா ?

அக்கரைப்பற்று விளையாட்டு துறையை சர்வதேச அளவில் கொண்டு செல்ல அதாஉல்லா ஆவல் கொண்டு இருந்தார். 

இன்று விளையாட்டு வீரர்கள் என்கின்ற பெயரில் வருகின்ற அதாஉல்லா அக்கரைப்பற்றுக்கான விளையாட்டு துறையை அழித்தவர் என்கின்ற கருத்தாடல்களின் மூலம் சொல்வதற்கு எதுமற்ற முறையில் எதாவது குறை ஒன்றை அதாஉல்லா மீது திணித்து விட வேண்டும் என்கின்ற சிலரது முயற்ச்சி ஒரு போதும் மக்களால் சரி காண முடியாது. 
அவர்கள் முன் வைக்கின்ற காரணிகள் 
1.எழுவட்டுவான் மைதானம் இல்லாமல் செய்யப்பட்டமை
2.புதிய மைதானத்திற்கான போதிய வசதி வாய்ப்புகளை வழங்காமை
3.நில ஆக்கிரமிப்பு என்பனவாகும் 
அக்கரைப்பற்று எழுவட்டுவான் மைதானம் பிரதான வீதியில் அமைந்திருந்த சிறப்பான மைதானம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை 
ஆனால் அக்கரைப்பற்றுக்கான வைத்தியசாலை ஒன்றினுடைய தேவை மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய காலத்தில் உணரப்பட்டதால் அந்த இடம் கைமாறியது. 
அதை தொடர்ந்து எமது வீரர்களாலும் நலன் விரும்பிகளாலும் பெறப்பட்ட இன்றைய மைதானத்தை சர்வதேச தரம் வாய்ந்த மைதானமாக கொண்டு வருவதற்கு அதாஉல்லா ஆவல் கொண்டிருந்தார்
கடந்த ஐந்து வருட காலமாக மைதான விடயமாகவும் அதன் எல்லைகள் தொடர்பிலும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பிலும் நாங்கள் மிகுந்த பிரயத்தனங்களை மேற் கொண்டு எல்லைகளை சரியாக குறிப்பெடுத்து அதற்க்குரிய ஒழுங்கு களை செய்திருக்கிறோம்

அணைத்து விடயங்களையும் ஒரே வேளையில் நிறைவு செய்ய வேண்டும் என யாரும் எதிர்பார்க்க முடியாது 
அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு அழகிய மைதானத்தை வழங்க முடிந்த அதாஉல்லா வுக்கு மாநகர சபைக்கு வழங்குவது பெரிய விடயமல்ல 
ஆனால் அக்கரைப்பற்றுக்கான ஒவ்வொரு அபிவிருத்தியையும் பெரும் கனவுகளுடன் செயல்படுத்தியவர் அதாஉல்லா என்பதை யாரும் மறுக்க முடியாது

எப்போது மாநகர சபை கலைக்கப்பட்டதே அன்றிலிருந்து சுற்றுமதில் அமைக்கப்பட்டதை கவனத்தில் எம் சகோதரர்கள் கொள்ள வேண்டும்

இந்த விடயத்தில் அக்கரைப்பற்றுக்கான மைதானம் எதோ தானோ என்று அமைக்க முடியாது. 
இன்சா அல்லாஹ் எதிர்காலம் அதற்கான தீர்வை அக்கரைப்பற்றை அழகுபடுத்திய
அதே மகனால் சர்வதேச மைதானத்தை பெற்றுத் தரும் என உறுதி பூணுவோம்.