கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை பிரதமராக முன்னாள்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் புத்த சாசன பாதுகாப்புஅமைச்சாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சராக டளஸ் அழகபெரும,
நிதி அமைச்சராக பந்துல குணவர்தன,
வெளிவிவகாரஅமைச்சராக நாமல் ராஜபக்ச,
பெருந்தெருக்கள் அமைச்சராக சாமல் ராஜபக்ச,
உள்ளூராட்சிமற்றும் மாநகர சபை அமைச்சராகரஞ்சித் டி சொய்சா,
கப்பல் மற்றும் கடற்துறை அமைச்சராக குமார் வெல்கம,
தொழிலாளர்அமைச்சராக காமினி லொக்குகே
மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சராகஎஸ்.எம்.சந்ரசேன நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சுக்களின் துறைகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களை மேம்படுத்தவும் இந்தநிழல் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.