பிரதமர் மோடி ஆப்பிரிக்காவின் 5 நாடுகளுக்கு சுற்று பயணம்

பிரதமர் மோடி ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி இன்று மொசாம்பிக் போய்ச் சேர்ந்தார்.

தலைநகர் மபுடோவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மொசாம்பிக்கில் அவர் அந்நாட்டு அதிபர் பிலிப்பே நுசியுடன் பேச்சு நடத்துகிறார். அந்நாட்டு பாராளுமன்றத்துக்கு சென்று பார்வையிடுகிறார்.

மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அங்கு வசிக்கும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். அவர்கள் மத்தியில் உரையாடுகிறார்.

அதன்பிறகு தென் ஆப்பிரிக்கா செல்கிறார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா ஆகியோருடன் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்துகிறார்.

மோடி தனது சுற்றுப் பயணத்தின் போது, மகாத்மா காந்தி அங்கு தங்கி இருந்த இடங்களுக்கு செல்கிறார். நெல்சன் மண்டேலா நினைவிடத்துக்கும் செல்கிறார்.

10-ந் தேதி காலை தான்சானியாவிலும், மாலை கென்யாவிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.