ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.
இன்றைய தினம் பிற்பகல் 3.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
அதன் பின்னர் இன்றைய தினம் மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் அலரி மாளிகையில் சந்திக்க உள்ளார்.
இந்த அவசர சந்திப்பிற்கான காரணங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.