படைவீரர்களை சிக்க வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் படைவீரர்களை பலிகொடுக்க சில தரப்பினர் முனைப்பு காட்டி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொரட்டுவ ஸ்ரீ போதிராஜராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்றைய தினம் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
கிரமமான முறையில் படையினரை சிக்க வைக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக உள்நாட்டு விசாரணைகளைத் தாண்டி கலப்பு நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றின் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டின் இறைமையை சீர்குலைக்க முயற்சித்தால் அதனை வரவேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பௌத்தர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சானத்தில் பௌத்தர்களுக்கு உண்டான இடம் இல்லாமல் போகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
வார்த்தை ஜாலங்களின் ஊடாக, வார்த்தைகளில் மூடி மறைத்து நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அரசியல் உருவாக்கப்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.