மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் நன்கு தெரிந்த ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க உள்ளதாக அறிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் தேர்தலில் புதியவர் ஒருவரை நியமிக்க ஸ்ரீ.சு.கட்சி முடிவெடுக்க உள்ளதாக கூறினார்.
ஸ்ரீ.சு.கட்சி ஆட்சியில் இருக்க வேண்டுமானால் இந்த இருவருக்கும் தெரிந்த ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ராஜபக்ஸக்கள் ஜனாதிபதியாக வருவார்களா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், “வரலாம்” என்ற அதிர்ச்சி பதிலளித்தார்.
மேலும் அர்ஜூன் மகேந்திரன் ஜனாதிபதியின் ஆலோசகர் வரிசையில் இல்லை எனவும், பிரதமரின் ஆலோசகர் வரிசையிலேயே இருப்பதாகவும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்