அதாஉல்லா எம்.பி யாக அதிகாரமுள்ள அமைச்சராக பல வருடங்கள் இருந்து காட்டியவர் அது அவருக்கு கனவல்ல
இது வரை எங்கு சென்றாலும் பதவி பெற வேண்டும் என்பவர்களுக்கு அது பகல் கனவாக இருக்கலாம்
அவ்வாறானவர்கள் இறுக தமது போர்வைகளை போர்த்திக் கொண்டு கனவு காணட்டும் .
மறைந்த தலைவரோடு தியாகங்கள் மூலம் தாம் வளர்தெடுத்த கட்சியிலே அதாஉல்லாஹ் எம்.பி ஆனாரே தவிர இடையில் வந்து செருகி பதவி பெற்றவரல்ல.
அதே போல் கட்சி ஒன்றை நிறுவி பா.உ கதிரையை மக்களுக்காக பயன்படுத்தியவர்
அதாஉல்லாஹ் பா.உ. ஆக இல்லாமல் போனது தொடர்பில் சமுகம் தான் கவலை கொள்ள வேண்டுமே ஒழிய அதாஉல்லாஹ் அல்ல…
பா.உ.பதவி என்கிற அதிகாரத்தை விட தேசிய காங்கிரஸ் எனும் கட்சியின் கொள்கைகள் அது சமுகத்துக்காய் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் தொடர்பில் இன்று அதிகம் பேசப்படுகிறது.
பாம்பு சட்டை கழற்றி ஓய்வெடுக்கும் நேரம் நாக்கிழு புழுக்களின் படம் எடுக்கலாம்
ஆனால் உரியதுகள் வந்து விட்டாள் புழுக்கள் தலை தெறிக்க ஓடும்.
அஸ்மி அப்துல் கபூர்