கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இன்று வியாழக்கிழமை மாலை அங்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.
நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான ஆறு மாத காலத்திக்ருள் 40 இலட்சம் ரூபா செலவில் அம்மைதானத்தை நிரப்பும் நடவடிக்கை முதல்வரின் விசேட திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்பணிகளை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி சகிதம் சென்று பார்வையிட்ட முதல்வர், சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு தரித்து நின்று வேலைகளை மேற்பார்வை செய்ததுடன் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.சாலிதீன், மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.