நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தவதற்கு அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்றுவதற்குறிய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த வேலைத்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து மத ரீதியான வைபவங்களை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனித ரமழானை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று (30) இடம்பெற்ற இப்தார் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.