மௌலவி ஏ.எல்.எம்.கலீல் மற்றும் மௌலவி எச்.எம்.எம் இல்யாஸ் ஆகியோரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தில் மீண்டும் இணைத்து கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் உயர் பீட செயலாளர் மன்சூர் ஏ காதர் அறிவித்துள்ளார்.
மௌலவி ஏ.எல்.எம்.கலீலை உச்சபீடத்தின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால், மஜ்லிஸ் ஏ சூறா என்ற அமைப்பின் தலைமை பதவியின் மூலம் அவர் உச்சபீடத்திற்கு உறுப்புரிமையை பெற்றிருந்தமை விலக்கிக் கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், மௌலவி ஏ.எல்.எம்.கலீல் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு விண்ணப்பித்திருந்ததற்கு அமைவாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையிலும் மேற்படி தீர்மானத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்வரும் உச்சபீடத்தின்; தீர்மானம் மௌலவி ஏ.எல்.எம்.கலீலுக்கு அறிவிக்கப்படும் எனவும் செயலாளர் மன்சூர் ஏ காதிர் மேலும் தெரிவித்தார்.