வடக்குகிழக்கில் இராணுவ சூன்யமாக்கல் நடவடிக்கைகள் எதிர்வரும் வருடத்துக்குள்பூர்த்தியடையும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைக்கு புறம்பாக இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர்இதனைக்குறிப்பிட்டார்.
எனவே சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று அவர்கேட்டுக்கொண்டார்.
அத்துடன் கால அவகாசம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய கூட்டமைப்பு அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் மனித உரிமைமீறல் சம்பவங்களின்180 டிகிரி அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கை சுயமாகவே தனிமைப்பட்ட நிலைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ் புலம்பெயர்வாளர்கள் இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்படவேண்டியது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் விரைவில் குறித்த சட்டமூலம் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு புலம்பெயர்வாளர்கள் உட்பட்ட பலரின் கருத்துக்களும் பெறப்படும் இதன்பின்னரே அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செல்வாக்குமிக்க தமிழ் புலம்பெயர்வாளர்கள் சிலர், இலங்கை அரசாங்கத்தின் இந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சிறந்த முன்னெடுப்பு என்று கூறுவதாகவும்மங்கள சமரவீர கூறியுள்ளார்.