சார்க் நாடுகளுக்கிடையில் இலங்கைக்கு முதலிடம்…!

278_277__1_2_278_277__1_1_statistics

உலக பொருளாதார பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச மனித மூலதன சுட்டெண் அடிப்படையிலான பட்டியலில் இலங்கைக்கு 50வது இடம் கிடைத்துள்ளது.

நாட்டின் இயலுமை, சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சுட்டெண் தயாரிக்கப்படுகிறது.

இதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை 50 ஆவது இடத்தையும் பூட்டான் 91 ஆவது இடத்தையும், பங்களாதேஸ் 104 வது இடத்தையும், இந்தியா 105வது இடத்தையும் பாகிஸ்தான் 118 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இலங்கையை பொறுத்தவரை கல்வியறிவே சுட்டெண்ணில் இந்தியாவை விட முதன்மை பெற உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்தையும், நோர்வே, சுவிட்ஸர்லாந்து, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.