தேரர் உட்பட மூவர் விளக்கமறியலில்…!

க.கிஷாந்தன்

வெலிமடை திவுரும்பொல ரஜமகா விகாரையிலுள்ள பழமை வாய்ந்த அரச மரத்தை வெட்டி பலகை அருத்த விகாராதிபதி உட்பட மூவர் கடந்த ஏப்ரல் 29ம் திகதி கைது செய்யப்பட்டிருந்ததோடு இவர்கள் 27.06.2016 அன்று வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை அவர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு வெலிமடை நீதவான் தம்மிக்க ராமநாயக உத்தரவிட்டுள்ளார்.

rules

இராமாயண இதிகாச வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி இராவணனால் இலங்காபுரிக்கு கடத்தி வரப்பட்ட சீதை மீண்டும் அயோத்திக்கு செல்ல முன்பு தான் கற்புடன் இருப்பதை நிரூபிப்பதற்காக தீக்குளித்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. இவ்வாறு சீதை தீ குளித்த இடமாக நம்பப்படுகின்ற இடமே இவ் ‘திவுரும்பொல’ விகாரையாகும். இவ்வாறு வரலாற்று சிறப்பு மிகு விகாரையிலுள்ள போதி மரத்தை வெட்டிய குற்றத்திற்காகவே இவ் விகாராதிபதி பிக்கு உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணபானே சந்திரவிமல தேரர் உட்பட மூவருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வெலிமடை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.