2020 ஆம் ஆண்டு நாட்டை ஆட்சி செய்ய போவது யார் என்பதை தீர்மானிக்கும் சாவி எம்மிடமே உள்ளது

ராஜபக்சவினர் நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்கள் எனவும் அவர்கள் ஆட்சிக்கு வர ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நாட்டை ஆட்சி செய்ய போவது யார் என்பதை தீர்மானிக்கும் சாவி தமது கட்சியிடமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அடுத்து ஆட்சியை பெற்றுக்கொள்ள கூடிய இரண்டு பிரதான கட்சிகளாகும். மக்கள் விடுதலை முன்னணி பற்றி பேசி பிரயோசனம் இல்லை. அவர்கள் இன்னும் 40 ஆண்டுகளுக்கு பேசிக்கொண்டே இருப்பார்கள் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்