அதிவேகத்தில் வெப்பமாக மாறும் பூமி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமி வெப்பமயமாகி வருவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 5 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வெப்பத்தின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் தற்போது பூமி அதிவேகமாக வெப்பமாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட மிக அதிகம் என கருதப்படுகிறது.

இதற்கு கார்பன்டை ஆக்சைடு அதிக அளவில் வெளியாவதே கரணம் என கூறப்படுகிறது. மேலும் வெளியாகும் கார்பன்டை ஆக்சைடு வளிமண்டலத்தில் தங்கி படிந்து வருகிறது.

இதனால் தட்பவெப்ப நிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு பூமி அதிக அளவில் வெப்பமடைந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.