அண்மைக் காலமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இடம்பெற்று வரும் சம்பவங்கள் குறித்து கட்சித் தொண்டர்கள் கவலையடைந்து வருகின்றனர்.
கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் இதுவரை காலமும் யாப்பு விதிகளின்படி பதவி –வகித்து வந்த செயலாளரின் பதவி –தகுதி நிலைகளை பெற்று புதிதாக ஆறு கடமைகளுக்கான செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து இன்றுவரை தொடரான பிரச்சினைகள் நடைபெற்ற வண்ணமுள்ளன.
உச்சபீடத்தில் தமது குரல்களை உயர்த்திப் பேசுபவர்களுக்கும் தலைவரினால் அரசியல் அதிகாரத்துடன் கூடிய பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என்று ஏற்கனவே கூறப்பட்டு பதவிகள் எதுவும் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மாற்றுக் கட்சியிலிருந்து துடைத்தெறியப்பட்டவர்களு
புதிய செயலாளர்கள் பதவிகளில் அநேகமானவை அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி வழங்கப்பட்டதன் மூலம் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலியின் மக்கள் செல்வாக்கையும் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியில் அவருக்குள்ள முதுமைப் போராளி என்ற கௌரவத்தையும் கலைத்துவிட எடுக்கப்பட்ட முயற்சி என இக்கட்சியின் நடு நிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய செயலாளர் நாயகத்தின் பதவி நிலை தொடர்பான தகுதி நிலை குறைக்கப்பட்ட போதிலும் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்ட நடவடிக்கைகளுக்கு புதிய நியமனங்களில் ஏற்று பொருத்தப்பாடாக அமைந்தாலும் கட்சியின் செயலாளர் நாயகத்தின் சட்ட அதிகாரமும் வலுவுள்ளதான நிலையில் தேர்தல் திணைக்கள நடவடிக்கைகளில் இரு செயலாளர்களின் பதவிப் போட்டி நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் பாலமுனையில் நடைபெற்ற கட்சியின் வருடாந்த மாநாட்டில் செயலாளர் நாயகம் பங்கு பற்றாமலும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் இடை நடுவில் வந்து கலந்து கொண்டிருந்த நிலையில் தேசியத் தலைவர் ஹக்கீம் செயலாளர் நாயகம் ஹஸன் அலியையும், தவிசாளர் ஹசன் அலியையும் தமது பேச்சின் ஊடாக குத்திப் பேசிக் கொண்டிருந்தமையானது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போராளிகளின் இதயங்களை நொறுங்கச் செய்தன.
இதே மாநாட்டில் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் தொடர்ச்சியாக இருந்து வந்த இரு பிரபல்யமிக்க மௌலவிமார்கள் மீது கொண்டுவரப்பட்ட தற்காலிக இடை நிறுத்தம் அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்படும் சமய, சமூக நிறுவனங்கள் என்பவற்றின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் நடவடிக்கைகளை விமர்சனத்துக்குள்ளாக்கிய நிலையில் தற்போது இடைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வருடாந்த மாநாட்டில் கட்சித் தலைவர் ஹக்கீம் ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆற்றிய உரை நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் ஊடகத்துறை மீது பொறுப்பு வாய்ந்த ஒரு சமூகத்தின் சார்பான கட்சித் தலைவர் மட்டுமின்றி அரசின் பங்காளிக் கட்சியின் தலைவர் ஒருவர் பேசக் கூடிய பேச்சல்ல.
இவ்வாறான நிலையில் இப்போது இன்னுமொரு பிரளயம் ஏற்படப் போகும் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. உள்ளூர் அரசியல் கள நி.ைலவரத்தைப் பொறுத்தமட்டில் இந்த விடயம் முக்கிய அம்சமாக பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இவ்வாரம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின்படி இனி ஒருபோதும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று மிகவும் காட்டமான முறையில் அறிக்கை விடுத்துள்ளார். இவ்வறிக்கையில் மாகாண, தேசிய ரீதியில் கட்சி அரசியல் ரீதியாகவோ தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது எதிர்காலத்தில் ஏற்படப் போகும் தேர்தல் சட்ட விதிகளுக்கமைவான பிரதிநிதித்துவம் மூலமாகவோ இனி ஒரு போதும் பிரதிநிதித்துவ அரசியலைச் செய்யப் போவதில்லை என்று பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் தான் மரணிக்கும் வரை கட்சியின் கடைத் தொண்டனாக இருந்து பணியாற்றப் போவதாக சூளுரைத்து சுதந்திர புருஷராக தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.
தவிசாளர் இவ்வாறான அறிக்கைகளை விடுவதற்கு மூல காரணம் இல்லாமலுமில்லை. செயலாளர் ஹஸன் அலியின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து கட்சியின் மூத்த போராளி ஒரு அநீதி இடம்பெற்று விட்டது என்பதற்காகப் பல தடவைகள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு வந்தார்.
பஷீர் சேகுதாவூதீன் ஆழமான கருத்துக்கள் கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்திருந்த நிலையில் அவருக்கு எதிரான நெருக்குவாரங்களும் கட்சியின் உயர் மட்டத்தினரால் முன்வைக்கப்படாமலும் இல்லை. இவ்வாறான நிலையில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கலந்து கொண்ட கூட்டமொன்றில் சிலர் தன்மாவட்டத்தைச்சேர்ந்த
உண்மையாகவே கட்சிக்குள் நடக்கும் அநியாயங்கள் தொடர்பாக யாராவது ஒருவர் குரல் கொடுத்தால் அவர் கட்சிக்குத் துரோகம் இழைக்கக் முற்படுகின்றார். கட்சிக்கு எதிரான சக்திகளுடன் ஒன்றிணைந்து விட்டார். கட்சியை அழிப்பதற்குச் சதி செய்கின்றார் என்று உண்மையான நன்னோக்கங் கொண்டவர்கள் மீது பழி சுமத்தப்படுவது கடந்த 16 வருடங்களாக அவ்வப்போது நடைபெற்று வரும் சம்பவங்கள்.
இந்தப் பழி சுமத்தலில் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் என நீண்ட பட்டியல் உள்வாங்கப்பட்டன. மேலும் தேசிய பட்டியல் எம்.பி. பதவிக்கு ஆசைப்படுகிறார். தூதுவர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று மேலதிக பழிகளும் துரோகிகளுடன் சேர்த்து வழங்கப்படும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை உரமூட்டி வளர்த்தெடுத்தவர்களில் பஷீர் சேகுதாவூத் தன்னாலான பங்களிப்பைச் செய்த ஒருவர். மறைந்த தலைவர் அஷ்ரபுடைய காலத்திலிருந்து இதுவரை கட்சிக்காக உழைப்பவர்.
இவ்வாறான கௌரவங்கள் இவர் மீது அடையாளப்படுத்தப்பட்டாலு
இருப்பினும் மறைக்கப்பட்ட பல உண்மைகளும் பல்வேறுபட்ட தொடர்புகளும் தலைவருக்கும் தவிசாளருக்கும் இடையே தாமரை இலை மேற் நீர் துளிகள் போன்று இருக்கின்ற உறவுகள் இனிமேல் பனிபோல் உருகி எல்லாமே வெளிச்சத்துக்கு வரும் என்ற நிலைப்பாடு இப்போது ஏற்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் கட்சித் தலைவராக அமைச்சராக இருந்தபோதிலும் சாதாரணமாக மனிதனுக்குள்ள பலம், பலவீனமெல்லாம் உள்ளன. இந்த வகையில் அரசில் ரீதியான தனிப்பட்ட ரீதியான தகவல்கள் தலைவர் தொடர்பில் கசியத் தொடங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கடந்த ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரம் கைமாறியதன் பின்னர் அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் மக்கள் மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு இருந்துள்ளன என்பது எவ்வளவு யதார்த்தம் என்பது கண்கூடு.
மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் முன்னாள் கல்வியமைச்சர் காயிதே மில்லத் மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம் சமூகத்துக்கு செய்த பணிக்கு பின்னர் அதிகளவில் பல்வேறு பணிகளைச் செய்தவர்.
தென் கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், இளைஞர் யுவதிகளுக்கான துறைமுக தொழில் வாய்ப்புக்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். இவரது சாதனைகளில் மிகவும் பிரதானமான ஒரு விடயம் விகிதாசாரத் தேர்தல் முறையின் வெட்டுப் புள்ளி 12.5% தை 5% மாகக் குறைத்தமை சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஜனாதிபதி அபேட்சகரான ஆர். பிரேமதாஸவிடம் பேரம் பேசி காரியங்களை வென்றெடுத்தவர். இதனால் நாட்டிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. மர்ஹும் அஷ்ரப் உயிரோடு இருந்த காலம்வரை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு தனது கட்சியின் மூலம் பங்களிப்பு செய்தவர். பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதிலும் சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்கவை பிரதமராக அரசாங்கம் அமைப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கி சந்தர்ப்ப சூழ்நிலை அரசியலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி காரியங்களை வென்றெடுத்தவர்.
அவர் கட்சியை வழி நடாத்திய காலத்தில் கட்சிக்கு துரோகம் இழைக்க முற்பட்ட அல்லது கருத்து முரண்பாடு கொண்ட ஒருவரைப் புறந்தள்ளினாலும் எல்லோரையும் அரவணைத்துச் சென்றதனால் சக்தி பெற்ற மனிதராக விளங்கினார்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமைப் பதவி வகித்த காலத்திலிருந்து பலர் அவருடன் முரண்பட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கினர். ஏ.எல். அதாவுல்லா, ரிஷாட் பதியுதன், அமீர் அலி, ஹிஸ்புல்லா என இந்தப் பட்டியல் நீண்ட காரணத்தினாலும் கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை 50% த்தால் குறைந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எல்லைகளும் சுருங்கிவிட்ட நிலையில் தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு குறித்த இடங்களில் காலூன்றி வருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூட தமது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்திய தலைவர் மீண்டும் அதே உறுப்பினர்களையே நம்பி மண்டியிட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது
(தொடரும்)
கலாபூசணம் .மீரா ,எஸ்.இஸ்ஸடீன்
நன்றி
வீரகேசரி வாரமஞ்சரி (26.06.16)