நாட்டில் வருடாந்தம் சுமார் 37 ஆயிரம் வாகன விபத்துக்கள் நடப்பதாகவும் அவற்றில் 2 ஆயிரத்து 800 விபத்துக்கள் கோர விபத்துக்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்துக்களில் சிக்குபவர்கள் நாட்டிற்கு பலனை தரக் கூடிய 15 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இந்த நிலைமையானது நாட்டின் பொருளாதாரத்திலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விபத்துக்களில் சிக்கும் பெரும்பாலானவர்கள் வலது குறைந்த நிலைமைக்கு சென்று விடுகின்றனர். விபத்து உள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சையளிக்கவும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் விபத்துக்கள் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் சுமார் ஒரு மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக தெரியவந்துள்ளது.