துஷ்ட ஆட்சியாளர்களிடம் இருந்து ஜனநாயகத்தை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் : தினேஷ் குணவர்தன

அரசாங்கம் நாடாளுமன்ற விவாதங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகளுக்கு அடிப்பணியவில்லை என்றால் பொதுமக்கள் என்ற பெரும் சக்தியை பயன்படுத்தி அரசாங்கத்தை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் மக்கள் மீது வரிகளை சுமத்தி வறிய மக்களை சுரண்டி உண்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், சகல சக்திகளையும் இணைத்து கொண்டு துஷ்ட ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றி, ஜனநாயகத்தை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.