கிழக்கின் எழுச்சியும் சேறு பூசல்களும்

எந்தப்புரட்சியும் ஏழணம் செய்யப்படாமல் ஏற்றுக்கொள்ளப் பட்டதில்லை. 
அசைக்க முடியாத சக்தி என ஆணியடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கத்துணிந்த மைத்திரியை ஒரு ஜோக்கராகவே அனைவரும் புறக்கணித்தனர். நையாண்டிகளை கண்டு கொள்ளாது கொள்கையை முன்நிறுத்தி சளைப்பில்லாமல் தொடர்ந்த பயணம் இறுதியில் உலகமே வியத்தகு வெற்றியாய் காணகிடைத்தது.
இது காலங்காலமாய்  நடைமுறையில் காணக்கிடைக்கும் நிரூபனங்கள்.
 
சுமார் இரண்டு வாரத்துக்கு முன் கருக்கொண்ட கிழக்கின் எழுச்சி பின் திரும்ப இயலாத அளவு ஆதரவையும் எதிர்ப்பையும் சமனாக சம்பாதித்துள்ளது 
ஹக்கீமின் தலைமையை ஏதோ காரணங்களுக்காக ஆதரிக்கும் குழுவினர்  மிகத்தீவிரமாக கிழக்கின் எழுச்சியை எதிர்த்து வரும் அதே வேளை  ஹக்கீமை பல காரணங்களுக்காக எதிர்ப்பவர்கள் கிழக்கின் எழுச்சியை மிக ஆக்ரோசமாக ஆதரித்து வருகின்றனர்.
 
கிழக்கு எழுச்சி தொடர்பாக எதுவும் பேசாமல் கண்டு கொள்ளாமல் இருக்கும்படி ஆரம்பத்தில் தம் விசுவாசிகளுக்கு உத்தரவிட்டிருந்த ஹகீம் அவர்கள் அதன் வழர்ச்சியின் வேகம் கண்டு கிழக்கின் எழுச்சிக்கு எதிரான தனது பதிலடியை அதன் தலைவர் வபா பாறுக்குக்கு தனிப்பட்ட முறையில் சேறுபூசுவதைக்கொண்டு ஆரம்பித்துள்ளார்.
 
1990ல் பொருலாளராயிருந்த வபா பாறுக் மு.காவிலிருந்து நீக்கப்படுவதற்கு காரணமாயிருந்த ஒரு சம்பவத்தை தனது பிரசாரத்தின் ஆயுதமாக ஹகீம் தேர்ந்து கொண்டதே கிழக்கின் எழுச்சி மீதான தனது பயத்தை வெளிக்காட்டுகின்றது.
 
தன்னை ஏமாற்றியதாக ஒரு பெண் பகிரங்கமாகவே தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாயிருந்த தன்னையே இன்னும் நிராகரிக்காத முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வபா பாறுக் மீதான இந்தக்குற்றச்சாட்டு  அத்தனை பாதிப்பை ஏற்படுத்திவிடப்போவதில்லை. இருந்தபோதும் குர் ஆன், ஹதீஸ், ஷரீஅத், கிலாபத் என பேசிக்கொண்டிருக்கும் கிழக்கின் எழுச்சி தலைமையை தர்மசங்கடப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 
 
கிழக்கின் எழுச்சியை வரலாற்றுக்கோணத்தில் அவதானித்துக்கொண்டிருக்கும் இக்கட்டுரையாளர் இக்குற்றச்சாட்டின் உன்மை நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் மு.காவின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை தொடர்புகொண்டு இவ்விடயத்தின் உன்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயன்றதில், இப்படியொரு சர்ச்சைக்குரிய நிகழ்வொன்று 1990களில் மிக பரவலாக பேசப்பட்டதை ஏற்றுக்கொண்டாலும் வபா பாறுக்கை தொடர்பு படுத்தி கட்சியையும் சங்கடத்துள்ளாக்க முயன்ற  பேரினவாதக்கட்சியில் அமைச்சராயிருந்த ஒரு முஸ்லிம் அமைச்சரே  இவ்விடயத்தைஇத்தனை பூதாகாரணமாக்கக்காரணமாயிருந்தார் என்பதை அறியக்கிடைத்தது. 
இவ்விடயம் பற்றி வபா பாறுக் அவர்களிடமே வினவியபோது  எந்த நிகழ்வை வைத்து அன்று என்னையும் அன்றைய மு. காவையும் மழுங்கடிக்க முனைந்தார்களோ அதே நிகழ்வை வைத்தே மீண்டும் கிழக்கின் எழுச்சியை மலினப்படுத்த முனைவது ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை என்று கூறிவிட்டு பின்னனியை இவ்வாறு கூறினார்
“1989ல் அரசாங்கத்தால் மு.கா.வின் உயர்பீட உறுப்பினர்களின் பாதுகாப்புக்கென அரசால் தரப்பட்ட 23 றிவோல்வர்களில் வட-கிழக்கை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதியாயிருந்த ரிவோல்வர்களில் ஒன்றை எனது நெருங்கிய நன்பர் ஒருவருக்கு கொடுத்திருந்தேன்.  புலிகளால் மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த காலமது, நான் றிவோல்வர் கொடுத்திருந்த எனது நன்பரின் பாடசாலைக்கால தமிழ் நன்பரொருவர் புலிகளுக்கு பயந்து கொழும்புக்கு வந்து எனது நன்பரிடம் தஞ்சமடைந்திருந்தார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னிடம் இருக்கும் ரிவோல்வரை ஒரு உற்சாகத்தில் எனது நன்பர் அவரிடம் காட்டி பெருமைப்பட்டுள்ளார். தனது பாதுகாப்புக்கு இந்த ஆயுதத்தை தந்து வைக்குமாறு அவர் கேட்கவே எனது நன்பரும் விபரீதம் பற்றி சிந்திக்காது அந்த றிவோல்வரை கொடுத்து விட்டார். 
இது பற்றி எனக்கு எதுவும் தெரியாமலிருந்தது ஒறுபுறம், தெரிந்திருந்தாலும் இதன் விபரீதங்களை ஆய்ந்து புரியும் பக்குவம் அந்த வயதில் எனக்கு இருக்கவில்லை என்பதே உண்மை. 
இப்படியிருக்கும்போதுதான் நான் வீட்டிலில்லாத  ஒரு அந்திவேளையில் என்னைத்தேடி வீட்டுக்கு பொலிஸார் வந்து போனதாகவும் தொடர்புகொள்ளுமாறு வேண்டி தொலை பேசி இலக்கம் கொடுத்துவிட்டு சென்றதாகவும் கூறினர், அதற்கிணங்க குறிப்பிட்ட இலக்கத்தை தொடர்பு கொண்டு விபரத்தை வினவியதும் தங்கள் பெயரிலுள்ள ரிவோல்வர் ஒன்றுடன்  தமிழ் வாலிபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இது விடயமாக விசாரிக்கவே வீட்டுக்கும் வந்ததாகவும் நிலைய அதிகாரி கூறினார். தமிழ் வாலிபர் ஒருவரின் கைக்கு எனது பெயரிலிருக்கும்  ஆயுதம் எப்படி சென்றிருக்கும் என்பதை அந்த நேரத்தில் அறியாது ஆச்சரியமடைந்தவனாய் உடனடியாக அப்போதே பொலிஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். இந்த விடயத்தை கையாளும் பொலிஸ் சார்ஜண்ட்  வீடு சென்றுவிட்டதால் மறு நாள் காலையில் வருமாறு கூறினார்.  
அன்றிரவு என்னைத்தொடர்பு கொண்ட எனது நன்பரும் தன்னையும் பொலிசார் விசாரனைக்காக வருமாறு கூறியுள்ளதாக கூறும் போதுதான் என்னிடமிருந்து பெற்ற ரிவோல்வர் அவரின் தமிழ் நன்பருக்கு கொடுபட்ட விடயம எனக்கு தெரிய வந்தது. இருவரும் மறுநாள் பொலீசுக்கு சென்று என்ன நடந்ததென அறிவோம் என்ற முடிவுடன் மறுநாள் காலை பொலீசுக்கு போக தயாராக முன் வழமைபோல் பத்திரிகைகளை படிக்க கையிலெடுத்தால் அனைத்து லேக் ஹவுஸ் பத்திரிகைகளிலும் என்னையும் எனது நன்பரையும் கொள்ளை முயற்ச்சி ஒன்றில் தொடர்புடையதாய் சந்தேகித்து பொலீஸ் தேடுவதாக கொட்டை எழுத்தில் பிரசுரமாகி இருந்தது. இச்செய்தியைக்கண்டு அதிர்ச்சியடைந்து மீண்டும் பொலீஸுக்கு கோள் பண்ணி  நான்தான் விருவதாக கூறியிருக்கும் போது எந்த விசாரனையும் செய்யாமல் பத்திரிகைகளுக்கு ஏன் இப்படி பிழையான தகவல்களை கொடுத்து அவமானப்படுத்துகிறீர்கள் என விசாரித்தபோது, தமக்கோ நிலையத்தில் உள்ள எவருக்குமோ அந்த பத்திரிகைச் செய்திகளோடு எந்த சம்பந்தமுமில்லை என்று நிலைய பொறுப்பதிகாரி கூறிவிட்டார். 
 
இந்த உரையாடல் முடிந்து சிறுது நேரத்தில் தலைவர் அஷ்ரப் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பத்திரிகைகளில் வந்திருக்கும் செய்தியைப்பற்றி வினவினார். அதுவரைக்கும் நடந்த விடையங்கள் அனைத்தையும் அவரிடம் கூறிவிட்டு பொலீஸுக்கு போவதற்கு தயாராவதாயும் கூறினேன். இவ்விடையத்தை கட்சியோடு தொடர்பு படுத்த சில சக்திகள் எத்தனிப்பதால் கவனமாக செயல்படுமாறு கூறியதுடன் கட்சியின் நலன் கருதி உங்களிருவரையும் கட்சியிலிருந்து நீக்கி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடப்போவதாகவும் கூறினார். 
கட்சியின் நலனுக்காய் எந்த முடிவெடுத்தாலும் தனக்கு எந்த மன்க்குறையும் இல்லையென கூறிவிட்டு நானும் எனது நன்பருமாய் பொலீசுக்கு சென்றோம். அங்கு எந்தவித விசாரனையும் நடத்தாமவ் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஒருவரின் காரியாலத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அங்கு அந்த சிரேஷ்ட அத்தியட்சகர் எங்களிடம் உரையாடிய முறையிலிருந்து புரிந்து கொண்டோம். இவ்விடயத்தில் கட்சியை தொடர்பு படுத்த ஒரு பேரினக்கட்சியைச்சேர்ந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கங்கணம் கட்டி  செயல்படுகிறார் என்பதை. அவரின் முயற்ச்சி வெற்றியளிக்காது என்பதை உணர்ந்த சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் அமைச்சரின் உத்தரவின்படி எமது வழக்கை அவசரகாலச் சட்டத்திகீழ் பதிவு செய்து சுமார் ஆறுமாதங்கள் பிணையில்லாமல் விளக்க மறியலில் தடுத்து வைத்து தனது ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.  பின்னர் இரண்டாவதோ மூன்றாவதோ தவணையில்  பொறுப்புணர்ச்சி அற்ற முறையில் ஆயுதத்தை பரிமாறிக்கொண்டதைத்தவிர வேறெந்த குற்றத்திலும் தொடர்பில்லையென வழக்கிலிருந்து நானும் எனது நன்பரும் விடுதலை செய்யப்பட்டோம்.”
 
இப்படி இக்குற்றச்சாட்டு பற்றி  தெளிவாக கூறியுதுடன் உண்மையைத்தெரிந்து கொண்டே அவதூறு கூறுபவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன் என்றும் இத்தகைய சேறுபூசல்களினால் எழுச்சியை மழுங்கடிக்க முடியாது எனவும் கூறினார்,  
இது இவ்வாறு இருக்க விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இல்லாத எந்த எழுச்சியும் சாத்தியமில்லை என்பதை அறியாத நிலையில் கிழக்கின் எழுச்சி முன்னெடுக்கப்பட்டிருக்காது என்பதை வபா பாறுக்கின் உறுதியிலும் உற்சாகத்திலிருந்தும் புரிய முடிகிறது.
 
 கிழக்கின் எழுச்சி முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை ஆட்டங்காண வைத்துள்ளதை அவர்கள் சார்பான சமூக ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. எதிர்வரும் நாட்களில் இன்னும் மோசமான மு.காவின் எதிர் நடவடிக்கைகளுக்கு கிழக்கின் எழுச்சி முகம் கொடுக்க வேண்டியிருக்கும்
 
-அரசியன்-