அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் குறித்து தமக்கும் பிரச்சினையுண்டு என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த அரசாங்கத்தை தோற்கடித்து புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தினால் இழைத்த தவறுகள் மீளவும் ஏற்படக் கூடாது என்னும் நோக்கிலேயே புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
விசேடமான ஓர் அரசாங்கமாக அமைய வேண்டுமென கருதப்பட்டது.எனினும் அரசாங்கம் மாறியுள்ள போதிலும் அரச இயந்திரத்தில் மாற்றம் ஏற்படாவிட்டால் புதிய அரசாங்கத்தில் பயனில்லை.
அரசாங்கத்தை நியமித்த சிவில் அமைப்புக்களின் நிலைப்பாட்டையே நானும் கொண்டுள்ளேன்.
அரசாங்கத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல இந்த அனைத்து தரப்பினரும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.