முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை

22-Mahinda-Rajapakse-afp_Fotor

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்மீதான மோசடி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கழுத்தை அறுத்துகொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு நன்றாக தெரியும் யார் திருடியது என்று. மஹிந்த ராஜபக்ஷ திருடினார் என தாம் ஒரு போதும் கூறவில்லை.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் எதுவும் இது வரையிலும் முன்வைக்கப்பட வில்லை. மஹிந்த ராஜபக்ஷவே திருட வேண்டிய அவசியமும் கிடையாது.

அவரது குடும்ப உறுப்பினர்கள் மோசடியில் ஈடுபட்டாலே போதுமானது என அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.