பாருங்கள் எம் மரத்தின் அவல நிலையை
பூத்து,காய்த்து,பழுத்துச் சொரிந்த எங்கள் மரத்தின் கனிகளை பதினாறு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் புசித்தோம்…..
துரதிஷ்டவசமாக மரத்தின் காவலன் மரித்து விட்டான்…
இதன் பிற்பாடு இந்த மரத்தை நோக்கி காழான்,கண்கொத்தி,
கக்குளுப்பே, போன்றவைகள் இதன் பழத்தை வேட்டையாட படையெடுத்து வந்தது…
பழத்தை வேட்டையாடியது மட்டுமல்லாமல்
இம் மரத்தின் பூ காய்
பிஞ்சு,இலையென்று பாராமல் அத்தனையையும் நாசப் படுத்தி இப்போது விறகாக்க முற்பட்டு விட்டது…
அப்படி விறகுக்காய் வேரோடு விற்றால்…
இம் மரத்தையே நம்பியிருக்கும்….
மரமே கதியென எண்னியிருக்கும் வெளவால் ஆகிய கிழக்கான் நாங்கள் எதில் போய் தொங்குவது…
எனவே……..
ஓரத்தில் நின்று ஓய்வெடுக்க நேரமில்லை விறகாக்கும் முன்னரே
மீட்டெடுக்க புறப்படுவோம்…
மரமே…….மரமே
மரமே…….மரமே
நீ பல்லாண்டு காலம் வாழனும்…
கிழக்கான் கைக்குள் சேரனும்….!!
ஷா மஜிட்