நோர்வே ஒஸ்லோவில் உள்ள ஒபெர ஹவுஸில் மரண தண்டனைக்கு எதிராக இடம்பெற்ற 6வது உலக காங்கிரஸ் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று கலந்து கொண்டார் என தகவல்கள்தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க் கலந்து கொண்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும்நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரண்டியுடன் கலந்துரையாடல்களை சமரவீரஇன்று மேற்கொள்ள இருப்பதாகவும்அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அல்-ஹுசைன், வருடத்தின்ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தந்து வாழ்த்துக்களை வழங்கியது நாட்டிற்குகிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றும்அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.