இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எரங்காவிற்கு அயர்லாந்து அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியின் இடைவெளி நேரத்தில் இதயத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படடார். அவருடைய இதயம் அளவுக்கு அதிகமாக, அதாவது நிமிடத்திற்கு 220 தடவை துடித்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வழக்கமான நிலைமைக்கு வந்தது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் இதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிவந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நி்ர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணி அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து செல்லும்போது அணியுடன் எரங்கா வரவில்லை. தற்போது அவரது பந்து வீச்சின் மீது சந்தேகம் எழுந்துள்ளதால், சர்வதேச போட்டிகளில் பந்து வீச அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் அவர் இலங்கை சென்று தனது பந்து வீச்சை சரிசெய்து ஐ.சி.சி.யிடம் நற்சான்றிதழ் பெற்று மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப வேண்டும்.