மைக்ரோசாப்ட் நிறுவனம் எட்ஜ் என்ற புதிய பிரவுசரை விண்டோஸ் 10 இயங்கு தளத்துடன் வெளியிட்டது. தற்போது அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் குரோம், பயர்பாக்ஸ், ஓபரா ஆகிவற்றுடன் தங்கள் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசர் தான் லேப்டாப் பேட்டரியை சேமிப்பதில் சிறந்தது என்று நிரூபிக்கும் வகையில் ஒரு பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் மேற்கொண்ட பரிசோதனையில் ஒரு எச்.டி. வீடியோவை தொடர்ச்சியாக குரோம், பயர்பாக்ஸ், ஓபரா மற்றும் எட்ஜ் பிரவுசரில் பிளே செய்கிறார்கள்.
குரோம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள லேப்டாப் ஆனது 4 மணி நேரம் 19 நிமிடத்தில் பேட்டரி தீர்ந்து ஆப் ஆகிவிடுகிறது. இதனை அடுத்து பயர்பாக்ஸ் 5 மணி நேரம் 9 நிமிடங்கள், ஓபரா 6 மணி நேரம் 18 நிமிடங்களில் ஆப் ஆகிவிடுகிறது. மைக்ரோசாப்ட் எட்ஜ் மட்டும் 7 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடிக்கிறது.
குரோம் பிரவுசரை விட எட்ஜ் 70 சதவீத நேரம் அதிகமாக நீடிப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. வீடியோவைத் தவிர மற்ற செயல்பாடுகளின் போதும் தன் போட்டி பிரவுசர்களை விட 36 முதல் 56 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக மைக்ரோசாப்ட் கூறுகிறது. இதற்கான பரிசோதனை வீடியோவையும் மைரோசாப்ட் வெளியிட்டுள்ளது.