ராஜபக்சவினர் காந்தியினரை விட ஜனநாயகவாதிகள் : நாமல்

இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, வர்த்தகர்கள் தமது திட்டங்களுக்கு ஒப்புதல் பெற ராகுல் காந்திக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச கூறியுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

ராகுல் காந்தி அப்படி இலஞ்சம் பெறுவது நல்லதென்றால், ஏன் தான் சிறிய இலஞ்சத்தை பெற்ற என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாமல் ராஜபக்ச தனக்கு நெருக்கமான இளம் வர்த்தகர் ஒருவரிடமே இதனை கூறியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு பதிலளித்துள்ள இளம் வர்த்தகம், இந்திய ஊடகங்கள் எதுவும் ராகுல் காந்தி லஞ்சம் பெற்றார் என்று குற்றம் சுமத்தவில்லையே எனக் கூறியுள்ளார்.தொடர்ந்தும் பேசியுள்ள நாமல், 

இந்திய ஊடகங்கள் காந்தியினருக்கும் பயம் என்பதால் குற்றம் சுமத்துவதில்லை. அப்படி குற்றம் சுமத்தினால் வெள்ளை வானில் தான் செல்ல வேண்டும். 

ராஜபக்சவினர் காந்தியினரை விட ஜனநாயகவாதிகள் என்பதால், எவரும் எதனையும் கூற இடமளித்துள்ளோம்.நாங்கள் சம்பாதித்துள்ளோம் என்று கூறினாலும் எங்கள குடும்பத்தில் உள்ள 5 பேர் இருப்பதற்கு ஒரு வீடு இல்லை. 

ஆட்சியில் இருக்கும் போது இது குறித்து அப்பாவிடமும் அம்மாவிடம் பல முறை கூறினேன். நாட்டை அபிவிருத்தி செய்யவே அவர்கள் தம்மை அர்ப்பணித்தனர். 

அம்மாவின் சித்தி (சிறிய பாட்டி) தனது பணத்தில் கொள்வனவு செய்த 14 காணிகளுக்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் யோஷித தம்பியை பிடித்து கொண்டுள்ளனர். 

எமக்கு சேறுபூச இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. எமக்கு மீண்டும் ஒரு காலம் வரும். அப்போது நாங்கள் இவற்றுக்கு பதிலளிப்போம் என நாமல் ராஜபக்ச தனது வர்த்தக நண்பரிடம் தெரிவித்துள்ளார்