கனடாவில் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி

கனடாவில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

முன்னதாக கனடாவில், தற்கொலைக்கு மருத்துவர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அகற்றியதை தொடர்ந்தே குறித்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளிகள்,மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை தாமே தேடிக்கொள்ள அனுமதி அளிக்கும் சுவிட்சர்லாந்து,நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பட்டியலில் தற்போது கனடாவும் இணைந்துள்ளது.

ஆனால், விமர்சர்கள்,புதிய சட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளனர். மேலும், சிதைவு நோய், மரப்பு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்வதைத் குறித்த சட்டம் தடுக்கும் என வாதிட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது, இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கை தான். எதிர்காலத்தில் இது விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளனர்.