பிரித்தானிய கருத்து கணிப்பு வாக்கெடுப்பிற்கு உதவ சென்றுள்ள நம் நாட்டு அமைச்சர்கள்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக இலங்கையில் இருந்து நான்கு அமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ளனர். 

சுசில் பிரேமஜயந்த, ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே பிரித்தானியா சென்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவர்களை தவிர முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவும் பிரித்தானிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். 

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றில் இருந்து விலக வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக இந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என டேவிட் கமரூன் தரப்பினர் கூறியுள்ளனர். 

பிரித்தானிய பிரஜைகளில் பெரும்பான்மையானவர்கள் விலகக் கூடாது நிலைப்பாட்டில் இருப்பதாக முதல் கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.