நாட்டுக்குள் நடைபெறும் மோசடி, துஷ்பிரயோகம் மற்றும் கொலைகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிவில் சமூக அமைப்புகளினதும், தொழிற்சங்கங்களினதும் கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தற்போதுள்ள நீதிமன்றங்களின் வேலைப் பழு அதிகமாக இருப்பதால் இத்தகைய பாரிய குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே இந்த விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.