மலையகத்தில் உள்ள அதிகமான தோட்டங்களில் என்றும் இல்லாதவாறு மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக ஓவ்வொறு நொடியும் குடியிருப்பு பகுதிகளில் வாழும் இம்மக்கள் தனது உயிரினை கையில் பிடித்துகொண்டு பீதியுடன் நிம்மதியற்ற நிலையில் வாழ்வதை காணகூடியதாக உள்ளது.
மழை வெயில் காற்று விஷ பாம்புகள் குளவி தாக்குதல் சிறுத்தையின் நடமாற்றம் என பல ஆபத்துக்களை சந்தித்து தனது வயிற்று பசியை நிறைவேற்றிக்கொள்வதற்காக உழைக்கும் தோட்ட தொழிலாளர்கள் நிம்மதியாக உறங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு குடும்பமே சந்தோஷத்தினை இழந்து வாழ்வதை காணக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் அக்கரபத்தனை டொரிங்டன் பிரிவில் ஒன்றான அலுப்புவத்தை என்ற தோட்டம் மன்றாசி நகரத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்தோட்டத்தினை பற்றி அதிகமானவர்களுக்கு தெரிந்திருக் வாய்ப்பில்லை இத்தோட்டத்தில் எவ்வித அடிப்படைவசதிகள் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருவது வேதனை குறிய விடயமாகும்.
அடிப்படை வசதிகளில் ஒன்றான பாதை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு இலாக்கியற்ற நிலையில் காணப்படுகின்றது. வெள்ளையர்களின் காலத்தில் கட்டபட்ட லயன் அறைகள் 30 வருடங்களாக கூரை தகரம் மாற்றப்படாமல் மழைக்காலங்களில் மழை நீரை அப்புறபடுத்துவதற்காக பல்வேறுப்பட்ட இடர்களை சந்திப்பதாக இத்தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.
கூரை தகரம் மாற்றி கொடுக்காத காரணத்தால் அதிகமான் வீடுகளில் கறுப்பு றபர் சீட்டுக்கள் போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த கடும் மழையினால் 11 வீடுகளை கொண்ட லயன் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இப்பகுதியல் வீடுகள் இல்லாமல் தற்காலிக வீடுகளில் வாழ்ந்தவர்களின் வீடுகள் சரிந்து விழுந்துள்ளது.
இக்குடும்பங்களை சேர்ந்தவர்கள் தற்போது தோட்டத்தில் உள்ள சிறுவர் நிலையத்தில் தங்கியுள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லையென பாதிக்கபட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாகம் மலையக அரசியல் வாதிகள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள வில்லையென இவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான பாலம் உடைந்த நிலையில் பாதுகாப்புயற்ற நிலையில் காணப்படும் இதேவேளை பலர் தவறி விழுந்துள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்புகள் அமைந்துள்ள பின் புறத்தில் பாரிய மண்மேடு உள்ளதால் எப்போது சரிந்து விழும் என்ற அச்சத்தில் இவர்கள் வாழ்வதாக குறிப்பிடுகின்றனர். இப்பகுதியில் மொத்தமாக 70 இற்கு மேற்பட்டவர்கள் மண்சரிவு ஏற்படலாம் என்ற நிலையில் உள்ளனர் என பாதிக்கப்பட்ட தமக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.