சட்டவிரோதமான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்கப்பிரிவினர், பொலிஸார் மற்றும் நிதி அமைச்சின் புதிய சுற்றி வளைப்பு பிரிவு என்பன போதைப் பொருள் வியாபாரங்களுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரிகளை அடையாளங் காண்பதற்கு அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைவது அவசியம் என்பதுடன், இதற்கு துணை போவது யார் என்றும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட பெருந்தொகையான கொக்கெய்ன் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த கொக்கெய்னை கொண்டு வந்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.