மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் அமைச்சு பல திட்­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது : பௌசி

fawsiiiiiii11
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் எல்லா இனங்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் இலக்­கோடு தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சு பல திட்­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது.

இத்­திட்­டங்கள் அடுத்த வருடம் ஜன­வரி மாதம் முதல் அமுல் நடாத்­தப்­படும் என தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரி­வித்தார். 

தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் இலங்­கையில் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் நடாத்­தப்­பட்ட கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இரா­ஜாங்க அமைச்சர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், 

‘இனங்­க­ளுக்­கி­டையில் சமத்­துவம் பேணப்­ப­டா­மை­யி­னா­லேயே இலங்­கையில் யுத்தம் ஒன்று ஏற்­பட்­டது. இதனால் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர். பெரும் அழி­வுகள் ஏற்­பட்­டன.

எனவே இவ்­வா­றான கொடிய யுத்­த­மொன்று மீண்டும் நாட்டில் ஏற்­ப­டா­தி­ருக்க இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டு­மென்­பது கலந்­து­ரை­யா­டலில் உறு­தி­செய்­யப்­பட்­டது. 

நாட்டு மக்கள் அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட பல­மிக்­கதும் உறு­தி­யா­னதும் முன்­னேற்­ற­மா­ன­து­மான நாடொன்­றினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே அர­சாங்­கத்தின் திட்டம் என்­பது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

நாட்டின் ஒவ்­வொரு பிர­சையும் தனது பொரு­ளா­தார சமூக கலா­சார மற்றும் அர­சியல் ரீதி­யாக சம­மான சந்­தர்ப்­பத்­தினைப் பெற்றுக் கொள்­வ­தற்கு ஏற்­ற­வ­கையில் திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. 

அமைச்சின் திட்­டங்­க­ளுக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் பிரித்­தா­னிய கவுன்ஸில் மற்றும் ஜேர்­மனி GIZ என்­பன 13. 4 மில்­லியன் யூரோ நிதி­யினை ஒதுக்­கி­யுள்­ளது.

வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள திட்­டங்­களை அத்­திட்­டங்­க­ளுடன் சம்­பந்­த­பட்ட அமைச்­சுகள் ஆய்வு செய்­வ­துடன் கண்­கா­ணிப்பு பணி­க­ளையும் மேற்­கொள்­ள­வுள்­ளன. 

அனைத்து இனத்­தி­னதும் அடிப்­படை உரி­மைகள் மதிக்­கப்­படும். அதற்­கான சட்­ட­வி­திகள், சமத்­துவம் மற்றும் பன்­மைத்­துவம் பாது­காக்­கப்­படும்.

சகல பிர­ஜை­களும் தமது இனம், சமயம், மொழி, சாதி, வயது, பால், பாலினம், பிறப்­பிடம் மற்றும் அர­சியல் கொள்கைகள் என்பவற்றினால் வேற்றுமைப்படாது கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சமூகம் ஒன்று கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அமைச்சின் செயற்திட்டங்களைப் பாராட்டியதுடன் இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.