தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல வருடங்களாக நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் குறித்த சட்டம் மூலம் குறித்து பேசிய போதும், அது வெற்றியளித்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அன்றையதினம் முழுவதும் (23ம் திகதி) இந்த சட்டமூலம் குறித்து விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, ஏகமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.