மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் நிறைவேற்றம்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் இன்றைய தினம் வடமாகாணசபையின் 54ம் அமர்வில் ஆளுங்கட்சி,எதிர்கட்சி பேதமில்லாமல் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்புடன்நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம்வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டு சபை அங்கீகாரத்துடன் அப்போதைய ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் அந்தநியதிச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்திருந்தார். 

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த நியதிச்சட்டத்தைஉருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட வடமாகாணசபை கடந்த 53ம் அமர்வில் மேற்படிநியதிச்சட்டத்திற்கான 1ம் வாசிப்பை செய்திருந்தது. 

இதனை தொடர்ந்து இன்றைய தினம்நடைபெற்றிருந்த 54ம் அமர்வில் குறித்த நியதிச்சட்டத்திற்கான 2ம் வாசிப்பைமுதலமைச்சர் வழங்கியதை தொடர்ந்து, அந் நியதிச்சட்டம் மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது. 

அதன்போது உறுப்பினர்கள்குறிப்பாக முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றானவறுமைக்கோட்டுக்குட்பட்டவர்களுக்கு உதவுதல் என்ற விடயத்தில் போரினால்பாதிக்கப்பட்ட மற்றும் அனர்த்தங் களினால் பாதிக்கப்பட்ட விசேட கவனத்திற்குரியவறுமைக்கோட்டுக்குட்பட்டவர்கள் என்பதை சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க. அந்த திருத்தங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 

மேலும் குறித்த நிதியத்தின் 9 பேர் கொண்ட ஆளுநர் சபையில் பெண்பிரதிநிதித்துவம் மற்றும் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறவேண்டும். எனகேட்டுக் கொண்ட தற்கிணங்க அந்த திருத்தங்களும் செய்யப்பட்டு. இறுதியாக சபைஅங்கீகாரத்தை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்சரன் முன்மொழிய எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிந்துசபையில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம்நிறைவேற்றப்பட்டுள்ள து.